a. உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க, அரசு வழங்கிய புகைப்பட ID தேவை.

எடுத்துக்காட்டுகள்: பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், தேசிய ID.

b. பணப் பரிமாற்றங்கள் சட்டவிரோதமான செயல்களுடன் தொடர்புடையவை அல்ல மற்றும் உங்கள் செயல்பாட்டின் தன்மைக்கு ஒத்ததாக இருப்பதை உறுதிசெய்ய நிதி ஆதாரம் தேவை.

எடுத்துக்காட்டுகள்: குறைந்தபட்சம் சமீபத்திய 3 மாத வங்கி அறிக்கைகள், குறைந்தபட்சம் சமீபத்திய 3 மாத ஊதிய ரசீதுகள், சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு ஒப்பந்தம், கடன் ஆவணங்கள், விற்பனை ஒப்பந்தம், வெற்றி பெற்றதற்கான ரசீது, வரி அறிக்கை போன்றவை.

c. பணம் செலுத்துவதற்கான அடிப்படை மற்றும் அனுப்புநருக்கும் பணம் பெறுபவருக்கும் இடையிலான உறவுகளின் வகையைப் புரிந்துகொள்வதற்கு பணப் பரிமாற்றத்தின் நோக்கம் அல்லது பணத்தை பயன்படுதுவதற்கான நோக்கம் தேவை.

எடுத்துக்காட்டுகள்:

  • தனிப்பட்ட பணம் அனுப்புதல்/குடும்ப ஆதரவு - உறவை நிரூபிக்க பின்வரும் ஆவணங்கள் பொருத்தமானவை: நீங்கள் பரிவர்த்தனை செய்த நபர்களுடனான படங்கள், திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ID போன்றவை.
  • வணிகப் பணம் அனுப்புதல்/பொருட்கள்/சேவைகளுக்கான கட்டணம் - பில்கள், ரசீதுகள், விற்பனை அல்லது கொள்முதல் ஒப்பந்தங்கள் போன்றவை.
  • கல்வி - கல்வி கட்டணம் போன்றவற்றின் சான்றுகள்.
  • மருத்துவ செலவுகள் - மருத்துவமனை பில்கள், மருந்தக ரசீதுகள், சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் போன்றவை.
  • தொண்டு ஆதரவு - தொண்டு நிறுவனத்திலிருந்து எழுதப்பட்ட ஒப்புதல் போன்றவை.
  • வீடு வாங்குதல் - கொள்முதல் ஒப்பந்தம், அடமான ஆவணங்கள் போன்றவை.
  • பரிசு - ரசீதுகள் போன்றவை.
  • பயணச் செலவுகள் - பயண டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள் போன்றவை.

d. Western Union உடனான உங்கள் உறவின் நோக்கம் மற்றும் தன்மையைப் புரிந்து கொள்ள மூன்றாம் தரப்புச் செயல்பாடு பற்றிய (தனிநபர் அல்லது வணிகத்தின் சார்பாக பணம் அனுப்புதல் அல்லது பெறுதல்) தகவல் தேவை.

எடுத்துக்காட்டுகள்: வணிகப் பதிவு ஆவணங்கள், நிறுவனம் அல்லது நோட்டரியின் அங்கீகாரக் கடிதம், மூன்றாம் தரப்பு நிதிகளுக்கான அணுகலைக் காண்பிக்கும் வங்கி அறிக்கை போன்றவை."