Western Unionஐச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் எவரிடமிருந்தும் மின்னஞ்சலைப் பெற்றால், அதைப் பற்றி உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், மின்னஞ்சலில் உள்ள எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம். இது உங்களிடமிருந்து முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கான "ஃபிஷிங்" முயற்சியாக இருக்கலாம். எனவே, சந்தேகத்திற்குரிய மின்னஞ்சலை உடனடியாக, SingaporeEnglish.customer@westernunion.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும் (உங்களுக்கு ஆங்கிலத்தில் ஆதரவு தேவைப்பட்டால்) அல்லது சீன மொழி பேசுபவர்களுக்கு SingaporeMandarin.customer@westernunion.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் பயனர் ID, கடவுச்சொல் அல்லது கிரெடிட் கார்டு விவரங்களைக் கேட்க Western Unionஉங்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பாது.