ஆம். நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் பணம் அனுப்புவதற்கு வெஸ்டர்ன் யூனியனை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் நேரில் சந்திக்காத எந்தவொரு நபருக்கும் பணம் அனுப்பவே அனுப்பாதீர்கள். மோசடி செய்பவர்கள் சில நேரங்களில் பணத்தை மாற்ற மக்களை ஊக்குவிக்கிறார்கள். பணம் அனுப்பும்படி கேட்கும் எவருக்கும் பணத்தை மாற்ற வேண்டாம்:

  • நீங்கள் உறுதிப்படுத்தாத ஒரு அவசரகால சூழ்நிலைக்கு.
  • ஒரு இணையவழி கொள்முதலுக்கு.
  • வைரஸ் எதிர்ப்பு பாதுகாப்புக்காக.
  • ஒரு வாடகை சொத்தின் மீதான ஒரு வைப்புத்தொகை அல்லது பேமெண்டுக்காக.
  • வெற்றிபெற்ற லாட்டரி அல்லது பரிசுகளை பெறுவதற்காக.
  • வரி செலுத்துவதற்காக.
  • தொண்டுக்கான நன்கொடைக்காக.
  • ஒரு மர்மமான பொருட்களை வாங்குதல் பணிக்காக.
  • வேலை வாய்ப்புக்காக.
  • ஒரு கடன் அட்டை அல்லது கடன் கட்டணத்திற்காக.
  • ஒரு குடியேற்றப் பிரச்சினையை தீர்ப்பதற்காக.

பணத்தை நீங்கள் பரிமாற்றினால், நீங்கள் யாருக்குப் பணம் அனுப்புகிறீர்களோ அந்த நபர் பணத்தை விரைவாகப் பெற்றுவிடுவார். பணம் கொடுக்கப்பட்ட பிறகு, நீங்கள் மோசடிக்கு ஆளானாலும் கூட, சில வரையறைக்குட்பட்ட சூழல்களில் தவிர, வெஸ்டர்ன் யூனியன் உங்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க முடியாமல் போகலாம்.